வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் என்பது மத்திய அரசால் பிரதான துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ன் பிரிவு 3 (1) ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இந்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சபையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பதிமூன்று அறக்கட்டளை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.